கார்பா:

த்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த  தப்லீக் ஜமாத் அமைப்பின் உறுப்பினராக 16வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோ ருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் குணமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் மகாராஷ்டிராவில் இருந்து சத்திஸ்கர் மாநிலத்தின்  கட்கோரா நகரத்திற்கு வந்த  16வயது சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரிடம் ஏப்ரல் 2 ஆம் தேதி எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனை, ராய்ப்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) சோதனைக்கு அனுப்பப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக கோர்பா கலெக்டர் கிரண் கவுசல் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுவன், கட்கோராவின் புராணி பஸ்தி பகுதியில் உள்ள ஒரு மசூதியில் சில நாட்களாக அடைக்கப்பட்டு இருந்த 16 பேரில் ஒருவர் என்றும், தற்போது அவர்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார் என்றும் கூறி உள்ளார்.

மசூதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 16 பேரும்,  தப்லிகி ஜமாஅத்தின் உறுப்பினர்களும், கடந்த மாத தொடக்கத்தில் நாக்பூரில் (மகாராஷ்டிரா) இருந்து கட்கோராவுக்கு வந்து, மசூதியில் தங்கியிருந்தனர் அவர்களிடம் கடந்த . மார்ச் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அவர்கள் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின் போது, ​​ கொரோனா வைரஸின் அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை., ஆனால் தற்போது ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மற்றவர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.