சென்னை:

கிருமிநாசினிகளை அதிக விலைக்கு விற்றதற்காகவும், மருத்துவர் பரிந்துரையில்லாமல் மருந்துகளை விற்றதற்காகவும் 50 மருந்தகங்களை தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறைதற்காலிமாக மூடியுள்ளது.


குற்றங்களின் அடிப்படையில் இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை இம் மருந்தகங்கள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகளின் பற்றாக்குறை அல்லது அதிக விலைக்கு விற்பது போன்ற புகார்களுக்காக உதவி மைய எண் (104) அறிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் மேற்கொண்ட சோதனைகளின்படி, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் சட்டத்தை மீறியதற்காக 50 மருந்தகங்கள் மீது வழக்கு தொடுத்துள்ளோம்” என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் சிவபாலன் தெரிவித்தார்.

மத்திய அரசு ஜூன் இறுதி வரை, 200 மி.லி கிருமிநாசினிக்கு 100 ரூபாய் விலை விதித்திருக்கிறது