வேலூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து கொரோனா தொற்று அதிகரிப்பால் மருத்துவமனைகளில் 1,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் ஊரடங்கை பின்பற்றி வீட்டில் இருந்தால் ஃபிரிட்ஜ், பீரோ, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக 440 படுக்கைகளும், 6 தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீதம் ஒதுக்கீடாக 171 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் 13 வென்டிலேட்டர்களும், தனியார் மருத்துவமனைகளில் 10 வென்டிலேட்டர்களும் தயார்நிலையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உளளமது.
அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் மாவட்டத்திலிருந்து வேலை பார்ப்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று தற்போது சொந்த ஊர் திருப்பியுள்ள 278 பேரில், 32 பேருக்குக் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொண்டை வலி மற்றும் காய்ச்சல் காரணமாக கொரோனா வார்டில் செவிலியர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருடன் பணியாற்றியவர்களையும் தனிமைப்படுத்தப்பட்டுஉள்ளனர். மேலும் 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெயங்கொண்டம் பகுதியில் இடைவெளியை பின்பற்றாத 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.