சென்னை:
தமிழகத்தில் நடப்பாண்டுக்கான தேர்வே நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், நம்ம பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அடுத்த ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
தமிழக கல்வித்துறையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக உதார்விட்டுக்கொண்டு இருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அவர் அறிவித்த திட்டங்களில் 50 சதவிகிதம் வரை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
தற்போது, கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டு உள்ளது. மாணவர்களின் 10வது வகுப்பு பொதுத்தேர்வு உள்பல பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த தேர்வுகள் பின்னர் நடத்தப்படுமா இல்லையா என்பது குறித்துகூட உறுதியாக அறிவிப்பு வெளியிட முடியாத கல்வி அமைச்சர், தற்போது, அடுத்த கல்வியாண்டிற்கான பாடங்கள் 90% தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
கோபில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்ச்ர, முதல்வரின் அறிவுரைப்படி 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடமாடும் காய்கறி வாகனசந்தை அமைக்கப்பட்டுள்ளது.
பெல் நிறுவனத்தின் உதவியுடன் புதிய ராட்சத எந்திரம் மூலம் கிருமி நாசினியை புகையாக தெளிக்கும் பணி தமிழகத்தில் முதல்முறையாக ஈரோடு மற்றும் கோபி பகுதியில் செயல்படுத்தப்படஉள்ளது.
ஊரடங்கு உத்தரவின் போது தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சரின் அறிவிப்புகளை சமூக வலைதள நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்…
செய்தி ஊடகங்களில் வேலம்மாள் போதி கேம்பஸ் உள்பட பல கல்வி நிறுவனங்கள் அட்மிஷன் தொடர்பாக விளம்பரங்கள் வெளியிடுவது கல்வித்துறை அமைச்சரின் கண்களுக்கு படவில்லைபோலும்…