சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர் கள், டிரைவர்களுக்கு ஏற்கனவே அரசு அறிவித்தபடி ரூ.1000 நிவாரணம் வழங்கப்படுவதாகவும், அதற்கான நிதி ஒதுக்கியும்  தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற மானியக்கோரிக்கை தொடரின் போது, 110 விதியின்கீழ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், தமிழக முதல்வர் எட்ப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் அறிவித்துள்ளபடி பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் 12லட்சத்து 13ஆயிரத்து 882 பேருக்கு தலா ரூ.1000 வீதம், அவர்களின் வங்கி கணக்குகளுக்கு செலுத்தும் வகையில் ரூ.12,13,882 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும்,

பதிவு செய்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் 83ஆயிரத்து 500 பேருக்கு தலா ரூ.1000 வீதம் 8,35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், மொத்தம் 12,973,82 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தொழிலாளர் நலத்துறை ஆணையர்  உத்தரவிட்டு உள்ளார்.

இந்த நிதியில் இருந்து பதிவு செய்துள்ள  கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் டிரைவர்களுக்கு வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.