கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ள நிலையில், மிசோரம் மாநில மக்கள் ஊரடங்கை கடுமையாக பின்பற்றி கொரோனா பரவலில் இருந்து தங்களை பாதுகாத்து வருகின்றனர்.

மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் மிசோரம் மாநிலத்தில் முக்கிய பகுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடையே சமூக விலகலை கடைபிடிக்கும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலோர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல்,வீட்டை விட்டு வெளியே சுற்றி வருகின்றனர். பலமுறை அரசும், காவல்துறையும் அறிவுரை கூறியும், செவிமடுக்காமல் ஊர் சுற்றுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், வடமாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநில மக்கள் ஊரங்கு உத்தவை சிரமேற்கொண்டு மதிப்பளித்து, தங்களையும், தங்களது மாநில மக்களையும் நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பு வருகின்றனர்.

மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் மிசோரம் சாலை

எந்தவொரு நபரும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதும் கிடையாது, சிலர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வந்தாலும், சமூக விலகளை திறம்படி கடைபிடித்து, கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்கின்றனர்.

அவர்களுக்கு அறிவுரை கூறவோ, எச்சரிக்கை விடுக்கவோ எந்தவொரு காவல்துறையினரும் தேவைப்படவில்லை. யாருடைய  அறிவுறுத்தலின்று, சமூக பாதுகாப்பை கருத்தில் கொன்று, மக்கள் விழிப்புணர்வுடன் சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர்..

மிசோரம் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் காட்சி

இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழகம் உள்பட அரசின் ஊரடங்கை மதிக்காத மாநில மக்கள், மிசோரம் மக்களிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள்  அறிவுரை கூறி வருகின்றனர்..

மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படும் மிசோரம் சாலை