சென்னை:
சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இஸ்லாமி யர்கள் அதிகம் வசிக்கும் சென்னை புதுப்பேட்டை பகுதி மூடப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் அனைத்து தெருக்களும் சீல் வைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் கடந்த இரு நாட்களாக பல மடங்கு அதிகரித்துள்ளது. நேற்று இரவு எண்ணிக்கைப்படி 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. டெல்லி தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் பலருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இவர்களில் பலர் தாங்களாகவே முன்வந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ள நிலையில், மேலும் பலர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுஉள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னை எழும்பூர் அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை புதுப்பேட்டையில் அனைத்து தெருக்களும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கிருந்துயாரும் வெளியே செல்லவும், யாரும் உள்ள செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அங்கு சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது!
மேலும், புரசைவாக்கம், புதுப்பேட்டை,சைதாப்பேட்டை,வேளச்சேரி ஆகிய 4 இடங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் படி சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.