புதுடெல்லி: வாகன மற்றும் மருத்துவக் காப்பீடுகள் இந்த 2020ம் ஆண்டின் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14ம் தேதி வரையிலான காலகட்டத்தில் முடிவடைந்தாலும், அவை காலாவதியாகாது என்றும், வரும் இந்த மாதம் 21ம் தேதிவரை அவை செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமூக வலைதளத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது; பொது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வாகனம் மற்றும் மருத்துவக் காப்பீடுகள் வாங்கியுள்ளோர், மார்ச் 25 முதல் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரையான காலகட்டத்தில் அவற்றைப் புதுப்பிக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, இந்தக் கால கட்டத்தில் அந்த காப்பீடுகளின் காலம் முடிந்தாலும், அந்தக் காப்பீடுகள் காலாவதியாகாது. இந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி வரை அவை செல்லுபடியாகும் என்றுள்ளார் நிதியமைச்சர்.
மேலும், இதுதொடர்பான அரசின் அறிவிப்பாணை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.