ரியானா 

சூயிங் கம்மை சுவைத்துவிட்டு பொது இடங்களில் துப்புவதன் மூலம் உமிழ்நீர் வழியே தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் எனவே அதனை தடை செய்வதாகவும் ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 48000 ஐ  தாண்டியுள்ளது. நாடுகள் பலவும் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமூக விலகலும் சுயதூய்மையும் கொரோனாத் தொற்று பரவுவதை பெருமளவில் தடுக்கும் என்பதால் 21 நாட்களுக்கு மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஹரியானா மாநில அரசு ஜூன் 30 வரை சூயிங்கம் விற்கவோ,  வாங்கவோ தடை விதித்துள்ளது.  ஏனெனில் சூயிங் கம்மை சுவைத்துவிட்டு பொது இடங்களில் துப்புவதன் மூலம் உமிழ்நீர் வழியே தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் எனவே அதனை தடை செய்வதாகவும் ஹரியானா மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரி அமன்தீப் சௌஹான் கருத்து தெரிவித்துள்ளார்.  

இந்த முன்னெச்சரிக்கை  நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் கூறினார். மேலும் பான்மசாலா குட்கா புகையிலை உள்ளிட்ட பொருட்கள் மீதான தடைகளை கவனமாக பின்பற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.