மும்பை:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அடிக்கடி கைகளை கழுவ வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இதிலும் பஞ்சாயத்து எழுந்துள்ளது.
பிரபல கிருமி நாசினி தயாரிப்பு நிறுவனமான டெல்டால் நிறுவனமும், லைஃப்பாய் சோப்பு தயாரிக்கும் நிறுவனமும் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளது.
டெட்டால் கிருமி நாசினி தயாரிப்பு நிறுவனமான ரெக்கெட் பென்கிசர் நிறுவனம் மீது லைஃப்பாய் சோப் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
டெட்டால் நிறுவனம் வெளியிட்டுள்ள கைகழுவும் விளம்பரத்தில், லைஃப்பாய் தோற்றத்தில் காணப்படும் சோப்பை காண்பித்து,, கைகழுவ இதுபோன்ற பார் சோப்புகள் உதவாது, டெட்டால் உபயோகியுங்கள் எனக் கூறுவது போல அமைந்துள்ளது.
இந்த விளம்பரத்துக்கு தடை விதிக்கக் கோரி லைஃப்பாய் நிறுவனம் நீதிமன்றத்தை நாடி உள்ளது. அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், டெட்டால் விளம்பரம் மக்களை திசைதிருப்பும் செயலில் ஈடுபடுகிறது என புகார் கூறி உள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, டெட்டால் நிறுவனம், தனது விளம்பரத்தை வரும் 21-ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக உத்தரவாதம் அளித்தது. அதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.