ரியானா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  கொரோனாத் தொற்றாளரின்   செல்போனை பயன்படுத்திய செவிலியரும் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது  நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரியானா மருத்துவமனையில் COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.  அவரை கண்காணித்து வந்த செவிலியரிடம் தற்போது கொரோனா வைரஸ்  கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “அனைத்து விதமான பாதுகாப்பு உபகரணங்களுடனே அனைவரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதனால் செவிலியருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதன்  காரணத்தை பல வழிகளில் ஆராய்ந்து வந்தோம். கொரோனா  பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை செவிலியர் பயன்படுத்தியது பின்னர் தெரிய வந்தது” என கூறப்பட்டுள்ளது.

மூச்சு மற்றும் கைகள் வழியாக இந்த வைரஸ் பரவும் என்பதால் செல்போன் பயன்படுத்துகையில் அதனையும் கிருமிநாசினி கொண்டு மென்மையாக துடைத்து விடுவது பாதுகாப்பானது என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது…