டில்லி

ன்று முதல் வங்கிகள் இணைப்பு அமலுக்கு வருவதால் 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகள் ஆகி உள்ளன.

 

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகள் இணைப்பை அறிவித்தது.  அந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதால் 10 பொதுத்துறை வங்கிகள் இணைந்து நான்காக ஆகி உள்ளது.  அதன்படி ஒரியண்டல் வங்கி மற்றும் யுனைடெட் வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைந்தன. இதைப்போல் கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைந்தது.

மேலும் ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா உடனும் இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும் இணைந்தன.   வரும் 2025க்குள் இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை எட்ட இந்த இணைப்புக்கள் நடந்ததாக அரசு தெரிவித்தது.

10 பொதுத்துறை வங்கிகள் 4 ஆக மாறியது குறித்த முக்கிய விவரங்கள் இதோ

1.     இதற்கு முன்பு 10 பொதுத்துறை வங்கிகளாக இருந்தவற்றில் ஆறு வங்கிகள் மீதமுள்ள 4 வங்கிகளுடன் இணைக்கப்பட்டதால் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி யுனியன் வங்கி, மற்றும் இந்தியன் வங்கி என நான்கு வங்கிகளாக இயங்க உள்ளன.

2.     இணைக்கப்பட்ட 6 வங்கிகளின் கிளைகளும் இந்த 4 வங்கிகளின் அங்கமாக இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இனி இணைந்த 4 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.

3.     நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள 21 நாட்கள் தேசிய ஊரடங்கில் எட்டாம் நாளன்று இந்த வங்கிகள் இணைப்பு அமலுக்கு வந்துள்ளது

4.     கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு வந்த போது வாராக்கடன்கள் மற்றும் மோசடிகள் அதிகரித்து நாட்டில் கடன் அளித்தோர் மிகவும் தொல்லையில் இருந்தனர்.

5.     வங்கிகள் இணைப்புக்கு அதிகாரிகள் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.   ஆனால் கடந்த வாரம் பிரதமர்  மோடிக்கு எழுதிய கடிதத்தில் கொரோனா பாதிப்பு அடங்கும் வரை இந்த இணைப்பை ஒத்திப்போடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

6.     கடந்த வருடம் இந்த வங்கிகள் இணைப்பை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டத்தால் ஒரு சில வங்கிக் கிளைகளில் பணிகள் பாதிப்பு அடைந்தன.  இந்த இணைப்பால் யாரும் பணி இழக்க மாட்டார்கள் என அரசு உறுதி அளித்தது.

7.     வங்கிகள் இணைப்பின் மூலம் வங்கித் துறை சுத்திகரிக்கப்பட்டு பொதுத்துறை வங்கிகள் வலுவடைவதால் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலரை நோக்கி எடுத்துச் செல்ல முடியும் என அரசு அறிவித்திருந்தது.

8.     கடந்த 5 ஆண்டுகளாக பொதுத்துறை வங்கிகள் சீரமைப்புக்காக அரசு வரி செலுத்துவோரின் ரூ.2.6  லட்சம் கோடி பணத்தை அளித்துள்ளது.

9.     ஏற்கனவே கடந்த 11 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மோசமான நிலையை அடைந்துள்ள இந்தியப் பொருளாதாரம் வங்கிகள் இணைப்பு நடக்கும் இந்த சமயத்தில் 21 நாட்கள் தேசிய ஊரடங்கால் மேலும் மோசமாகி உள்ளது.

10.  கொரோனாவால் இதுவரை இந்தியாவில் 1466 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 38 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்த இந்திய அரசு தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்பட மாட்டாது என உறுதி அளித்துள்ளது.