வாஷிங்டன்:
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 865 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதுதான், இதுவரை வெளியான உயிரிழப்பிலேயே அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த துயர சம்பம் அமெரிக்க மக்களிடையே பிதியை கிளப்பி உள்ளது. இந்த இழப்புக்கு அதிபர் டிரம்ப் வேதனை தெரிவித்து உள்ளார்.
திங்களன்று (30ந்தேதி) இரவு 8:30 மணிக்கு கொரோனா உயிரிழப்பு 3,008 ஆக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (31/03/20) இரவு 8.30 மணிக்கு 3,873 ஆக உயர்ந்ததுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரஸ் 865 பேரைக் கொன்றதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படும் 188,172 உறுதிப்படுத்தப்பட்ட கேஸ்கள பதிவாகி இருப்பதாகவும், இது எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகம் என்று தெரிவித்து உள்ளது.
கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் சீனாவை விட அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது என்றும் கலை தெரிவித்து உள்ளது.
இதற்கிடையில் செய்தியளார்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த நிகழ்வு “மிகவும் வேதனையானது” அமெரிக்கா ஒரு கொரோனா வைரசுடன் மல்யுத்தம் செய்கிறது, இந்த கொரோனா வைரஸ் 240,000 அமெரிக்கர்களைக் கொல்லக்கூடும் என்றும் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
இது ஒரு கொடுமையான தொற்றுநோய், பிளேக் போன்ற கொடுமையானது என்று வர்ணித்தவர்,. “ஒவ்வொரு அமெரிக்கனும் எதிர்வரும் கடினமான நாட்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.