டெல்லி:
கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ் ஜெட், தனது ஊழியர்களின் மார்ச் மாத சம்பளத்தில்,10-30% குறைக்க உள்ளதாக தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே கடுமையான நஷ்டத்தில் இயங்கி வரும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், ஊரடங்கு காரணமாகவும், விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாலும் மேலும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பைஸ் ஜெட் தகவல் தொடர்பாளர், ஸ்பைஸ் ஜெட், நிர்வாக இயக்குநர் அஜய் சிங் அதிகபட்சமாக 30 சதவிகித இழப்பீட்டைக் குறைக்கத் தேர்ந்தெடுத்து உள்ளதாகவும், மார்ச் மாதத்தில் தனது அனைத்து ஊழியர்களின் 10-30 சதவீத சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளது என்றும், தற்போது கடினமான நேரம், இதனால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே, இண்டிகோ மற்றும் கோ ஏர் விமான நிறுவனங்கள் சம்பளம் குறைப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.