சென்னை

உலகெங்கும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 50 சதவீத மக்களிடம் செரிமான பிரச்சனைகள் இருப்பதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

 இதுகுறித்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியரும்,  ஜீரண மண்டலம் மற்றும் எண்டோஸ்கோப் துறை நிபுணர்  சந்திரசேகரன் அவர்கள் கூறுகையில்,

 “COVID-19  தாக்குதலுக்கு உள்ளானோரிடம் கடுமையான இருமல், காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்றவை முதன்மை அறிகுறிகளாக கண்டறியப்பட்டு  வருகின்றன. ஆனால் தற்போதைய ஆய்வில் 50 சதவீத மக்களிடம் மேற்கூறிய  அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை. இருந்தபோதும்  பலருக்கும் பசியின்மை, வாந்தி,  வயிற்றுவலி போன்ற உபாதைகள் இருந்துள்ளன” என்றார்.

மேலும் மூச்சு வழியாக மட்டுமின்றி மலம் வழியாகவும் COVID-19 பரவும் என  ஜீரண மண்டல துறை நிபுணர் டாக்டர் கோகுல் தெரிவித்துள்ளார். எனவே “கழிவறைகளை நன்கு  தூய்மை செய்த பின்பே பயன்படுத்த வேண்டும்” என்றார்.

கொரோனாத் தொற்றை கண்டுபிடிப்பதில் இந்த ஆய்வு முடிவு  அதிக பயனை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.