சென்னை:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலையிழந்து தவிக்கும், கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி, தமிழகஅரசு அரசானை வெளியிட்டு உள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஏப்ரல் 14ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு ரூ.1000 உளபட ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ எண்ணெய் வழங்கும் வகையில் சிறப்பு நிதியாக ரூ.93 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசானை வெளியிடப்பட்டுள்ளது.