’ நாங்க செத்து பொளைச்சவங்க’’
கொரோனாவை வென்ற தாத்தா-பாட்டி..
60 வயதுக்கு மேற்பட்டவர்களை கொரொனா தாக்கினால் ‘ அது பூட்ட கேஸ்’ என்று டாக்டர்களே கை விரிக்கும் நிலையில், 92 வயது தாத்தாவும், 88 வயது பாட்டியும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்கள் என்பதை நம்ப முடிகிறதா?
அதிசயம் ..ஆனால் உண்மை.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகேயுள்ள ரன்னியை சேர்ந்தவர் தாமஸ். வயது 93. அவரது மனைவி மரியம்மாவுக்கு 88 வயதாகிறது.
இத்தாலியில் வசிக்கும் அவர் மகன் அண்மையில் ஊருக்கு வந்துள்ளார்.
அங்கிருந்து என்ன கொண்டு வந்தார் என்று தெரியவில்லை.
ஆனால் கொரோனாவை சுமந்து வந்துள்ளது, ஊர்ஜிதமாகியுள்ளது..
தந்தைக்கும், தாய்க்கும் கொரோனா தொற்று ஏற்பட. இருவரும் கோட்டயம் அரசு மருத்துவமனையில் கடந்த 9 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சர்க்கரை நோய் உள்ளிட்ட வேறு பல பிரச்சினைகளும் அவர்களுக்கு இருந்தது.
தாமசுக்கு சில நாட்களுக்கு முன்னர், மாரடைப்பு ஏற்பட்டு வெண்டிலேட்டரில் வைத்து, சிகிச்சை அளிக்கும் அளவுக்கு நிலைமை சிக்கலானது.
ஒன்றும் ஆகவில்லை.
இரு தினங்களுக்கு முன் மீண்டும் அவர்களுக்கு பரிசோதனை நடந்துள்ளது.
கொரொனா இல்லை. அவர்களை விட்டு நீண்ட தூரம் விலகி ஓடி இருந்தது, கொரோனா.
வேறு சில சில்லறை கோளாறுகள் இருப்பதால், அதற்கு மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள், இந்த தாத்தாவும், பாட்டியும்.
ஆயுசு நூறு.
– ஏழுமலை வெங்கடேசன்