நீ பாதி நான் பாதி கண்ணே…தெலுங்கானா முதல்வர்..

கொரோனா வைரஸ் பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனாவின் பிடியில் இருந்து மக்களை மீட்கப் பணத்தைக் கொட்ட வேண்டிய சுமையும் மாநில அரசுகள் தலையில் ஏற்றப்பட்டுள்ளது.

எப்படிச் சமாளிப்பது?

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நேற்று உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசினார்.

அரசாங்க கஜானாவில் இருந்து ஊதியம் பெறும் அனைவரின் ‘பாக்கெட்’டில் கை வைப்பதென்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஆமாம்.

ஆட்களின் தகுதிக்கு ஏற்ப சம்பளத்தில் ‘கட்’.

முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் கார்ப்பரேஷன் தலைவர்கள் சம்பளத்தில் 75 % இந்த மாதம் பிடிக்கப்படுகிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் சம்பளத்தில் 60 % ‘கட்’.

நான்காம் நிலை ஊழியர்களான பியூன், டிரைவர்கள்,துப்புரவு தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்தில் 10 % வெட்டு.

நான்காம் நிலை ஊழியர்களுக்கு மேல் மட்டத்தில் உள்ளோருக்கு ( கெசட்டட் மற்றும் கெசட்டட் அல்லாதவர்கள்)-

‘உனக்கு பாதி.. எனக்கு பாதி’ என்று அறிவித்துள்ளது, தெலுங்கானா அரசு.

ஆம். அவர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் வெட்டு.

– ஏழுமலை வெங்கடேசன்