பத்தனம்திட்டடா:
கேரளாவில் மாவட்டஆட்சியர் ஒருவர் பழங்குடி மக்களுக்கு அந்த தொகுதி எம்எல்ஏ மற்றும் அதிகாரிகளுடன் உணவுப்பொருட்களை சுமந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே வேளையில், சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது.
கண்ணாடியில் இருப்பவர் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர், புளூ டிராக் பேண்டில் உள்ளவர் சிபிஎம்மின் எம்.எல்.ஏ.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், பத்தனம்திட்டா அருகே உள்ள மலைப்பகுதிகளில் வசித்து வரும் பழங்குடி இன மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க, அந்த பகுதி சிபிஎம் எம்எல்ஏ கே.யூ.ஜெனீஷ் குமார் உடன், மாவட்ட ஆட்சியர் பி.பி. நூஹ் ஐ.ஏ.எஸ் உள்பட அதிகாரிகள், ஆற்றைக் கடந்துசென்று, உணவுப்பொருட் களை அங்கு வாழும் மக்களுக்கு வழங்கும் காட்சி போன்ற செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
எம்எல்ஏ மற்றும் ஆட்சியினரின் அர்ப்பணிப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. மக்களுடன் அரசாங்கம் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த செயல்கள் அமைந்துள்ளன.
இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் ஒருபுறம் வரவேற்பு அளித்துள்ள நிலையில், அவர்களுடன் புகைப்படக்காரர் ஒருவரையும் அழைத்துச்சென்று, ஒவ்வொரு நடவடிக்கைகளையும் போட்டோ ஷூட் எடுத்து சமுக வலைதளங்களில் பதிவிட்டது சர்சையையும் கிளப்பி உள்ளது.
மக்கள் பணியாற்ற வேண்டியது அவர்களின் கடமையாக இருக்கும்போது, எதற்காக அவர்கள் புகைப்படக்காரரை அழைத்துச் சென்றார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்..
தங்களை பிரபலப்படுத்தும் நோக்கிலேயே அவர்கள் இந்த செயல்களை செய்தார்களா? ஆட்சியரும் அரசியல்வாதிப்போல செயல்படுவதா? என்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சிவப்பு கோடால் வட்டமிட்டு காட்டப்பட்டு இருப்பவர், போட்டோகிராபர்