மும்பை:
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா ரூ.500 கோடி நிதி உதவி வழங்கி உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பெரும் நெருக்கடியைச் சமாளிக்க பெரும் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா 500 கோடி ரூபாய் அளிப்பதாகத் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதில், “நாம் ஒரு மனித இனமாக எதிர்கொள்ளவிருக்கும் மிகக் கடினமான சவால்களில் ஒன்றாக கோவிட்-19 இருக்கும். இதற்கு முன் தேசத்துக்குத் தேவை இருக்கும் போது டாடா டிரஸ்ட்ஸ் மற்றும் டாடா குழும நிறுவனங்கள் அதற்குப் பங்காற்றியுள்ளன. முன்னெப்போதும் விட இந்தத் தருணத்தில் களத்தில் இறங்குவதற்கான தேவை அதிகம் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.