சென்னை
கொரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி அன்று கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் 185 நாடுகளுக்கு மேல் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொற்றால் 4.25,566 பாதிக்கபட்டுளனர். இவர்களில் 18887 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 536 பேர் பாதிக்கப்பட்டு 11 பேர் பலியாகி உள்ளனர். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
தமிழக அரசு சார்பில் நேற்று மாலை 6 மணி முதல் 31 ஆம் தேதி வரை மாநிலம் எங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று இரவு பிரதமர் மோடி தனது தொலைக்காட்சி உரையில் நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இந்த ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் கோயம்பேடு காய்கறி மார்கெட் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. அங்கு காய்கறிகள் வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். இதையொட்டி காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு வரும் 27 மற்றும் 28 தேதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயம்பேடு காய்கறி மார்கெட் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.