புனே
புனே நகரில் உள்ள மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன் என்னும் நிறுவனம் கொரோனா சோதனைக் கருவியைக் கண்டு பிடித்து அதற்கு இந்திய மருத்துவக் குழு அங்கீகாரம் பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் பல அரசு மருத்துவமனைக்லில் கொரோனா சோதனை நடைபெறுகிறது. இதைத் தவிர சில தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா சோதனை நடத்த இந்திய மருத்துவக்குழு அனுமதி வழங்கி உள்ளது. இந்த சோதனை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக நடத்தப்படுகிறது. தனியார் ஆய்வகங்களுக்கு ரூ.4500 கட்டணம் வசூலிக்க அரசு உத்தரவு இட்டுள்ளது.
புனேவை சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன் என்னும் நிறுவனம் கொரோனா சோதனை செய்யும் கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இந்த கருவியின் மதிப்பு ரூ.80000 ஆகும். சுமார் 100 பேருக்கு இந்தக் கருவியின் மூலம் கொரோனா சோதனை செய்ய முடியும்,
இன்று இந்த கருவிக்கு இந்திய மருத்துவக்குழு மற்றும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுக் கழகம் அனுமதி அளித்துள்ளது. இனி அந்த நிறுவனம் இந்த கருவிகளை வணிக ரீதியாக விற்பனை செய்ய முடியும். ஒரு வாரத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கருவிகளை தங்களால் தயாரிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.