ஸ்ரீநகர்:

பொதுபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில்  வைக்கப்பட்டிருந்து,  ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா, சுமார் 8 மாத காலம் கழித்து இன்று விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு (2010)  ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு  370-வது பிரிவை மோடி தலைமையிலான பாஜக அரசு ரத்து செய்தது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள், முக்கிய தலைவர்கள் என ஏராளமானோரை கைது செய்து வீட்டுக்காவலில் சிறையில் அடைத்து.

அங்கு படிப்படியாக இயல்புநிலை திரும்பி வந்ததைத் தொடர்ந்து, பல தலைவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் பரூக் அப்துல்லா எம்.பி.,  உமர் அப்துல்லா,, மெகபூபா முப்தி  போன்றோர் தொடர்ந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு வந்தனர்.

இவர்களை விடுதலை செய்யக்கோரி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசை வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த 13ந்தேதி பரூக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இன்று உமர் அப்துல்லா இன்று விடுதலை செய்யப்பட்டு உள்ளார். உமர் அப்துல்லா விடுதலையையொட்டி, அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும் ஏராளமானோர் அவரதுவீட்டு வாசலில் கூடியிருந்தனர்.