நியூயார்க்
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரும் மீ டூ புகாரில் சிக்கி சிறைத் தண்டனை அனுபவிப்பருமான ஹார்வி வெயின்ஸ்டனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 34000 பேருக்குப் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் 417 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்க செனட் உறுப்பினர் ராண்ட் பால் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான ஹார்லி வெயின்ஸ்டன் ஷேக்ஸ்பியர் இன லவ் படத்துக்கு ஆஸ்கார் விருது பெற்றவர் ஆவார். இவர் தன்னிடம் 2013 ஆம் வருடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக நடிகை ஜெசிக்கா மான் புகார் அளித்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு தன்னிடம் பாலிய அத்துமீறல் செய்ததாகத் தயாரிப்பு உதவியாளர் மிமி ஹலேயி புகார் அளித்திருந்தர்.
அதன் பிறகு ஆஞ்சலினா ஜுலி, சல்மா ஹெய்க் உள்ளிட்ட 90 பெண்கள் அவர் மீது புகார் அளித்துள்ளனர். கடந்த மாதம் இவருக்குப் பலாத்காரம் மற்றும் பாலியல் அத்து மீறல் குற்றங்களுக்காக 23 வருடச் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு நியூயார்க் மாகாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
அவருடன் மருத்துவமனையில் இருந்த காவலர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் வெயின்ஸ்டனுக்கும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பதிப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது அவர் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.