சென்னை:
மருத்துவத்துறையில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கைகளை தட்டி தங்களது ஆதரவினையும், நன்றியையும் தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி உள்பட தமிழக அமைச்சர்களும் சரியாக மாலை 5 மணிக்கு தங்களது கைகளை தட்டி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக உயிரையும் பொருட்படுத்தாது இரவு பகலாக பணி புரிந்துவரும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவரை அடுத்து தமிழக அமைச்சர்களும் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.
தமிழகத்தில் சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் உள்ள பொதுமக்களும் தங்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து கைதட்டி நன்றி தெரிவித்தனர்.
[youtube-feed feed=1]