நாடு முழுவதும் கொரோனா, கரோனா என மக்களிடையே பீதி நிலவி வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க வில்லை என உலக நாடுகள் கூக்குரலிட்டு வருகின்றன.
ஆனால், நமது நாட்டிலேயோ, அகஸ்தியர் போன்ற ஆன்மிக சித்தர்கள் அருளிய உணவு வகைகளை உண்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடி, எந்தவித நோய் தொற்றும் ஏற்படாது என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்… இதில் பல நன்மைகள் உள்ளது என்பது நம் முனோர்களின் ஆரோக்கியத்தை கண்டு நாம் உணர்ந்திருக்கிறோம்…
ஆனால் இன்று… இளந்தலைமுறையினே பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டு, உடல் பருமனாலும் அவதியுற்று வருகின்றன… இதை தடுக்க நினைப்பவர்கள், விருப்பமுள்ளவர்கள், தங்களது நடைமுறைகளை மாற்றி, சிறிது காலம் நமது முன்னோர்கள் வகுத்த உணவு பழக்க முறைகளை பின்பற்றித்தான் பாருங்களேன்…
இதை பின்பற்றுவதால், உங்களது உடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படப்போவதில்லை என்பது உறுதி… முயற்சித்துதான் பாருங்களேன்….
இன்றைய காலக்கட்டத்தில், நகரப்பகுதிகள் மட்டுமல்லாது கிராமப்பகுதிகளில் சுகர் எனப்படும் நீரழிவு நோய், பிரஷர் எனப்படும் ரத்த அழத்தம் போன்ற நோய் தாக்கத்துக்கு ஆளாகும் நபர்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்…
அதிகாலையிலயே, சாலைகளிலும், பூங்காக்களிலும் நடைபயிற்சி செல்பவர்களை காணும்போது, இதை நாம் புரிந்துகொள்ள முடியும்…
யாரைக்கேட்டாலும், மருத்துவர் சொல்படி நடை பயிற்சி செய்கிறேன் .. என்ற ஒரே வார்த்தையைத்தான் கிளிப்பிள்ளை கூறுவதுபோல கூறி வருகிறார்கள்…
இதற்கு முக்கிய காரணம்… நமது உணவு பழக்க வழங்கங்கள் மாற்றப்பட்டதே….
வெளிநாட்டு மோகத்தால் விரும்பத்தகாத உணவுகள், அசைவ உணவுகளை உண்பதும் ,மேலும் சரியான உணவு முறை பழக்கம் இல்லாத காரணமும் தான் …
இந்த உணவு பழக்கமுறைகளை மாற்றி, உங்களின் உடல்நலனின் மீது அக்கறை எடுத்து, முயற்சித்துதான் பாருங்களேன்…
உணவே நம் உடலை வளர்க்கிறது. நம் உயிரைக் காக்கிறது. அதனால்தான் திருமூலர், ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என கூறினார்.
உடல் ஆரோக்கியத்துக்காகத்தான் உண்கிறோம். அதனால், நாம் உண்ணும் உணவை கவனத்தோடு தேர்ந்தெடுக்க வேண்டும். உணவும் மனமும்தான் நம் வாழ்வைத் தீர்மானிக்கின்றன.
சித்தர்களில் அகத்தியர், உணவை மருந்தாக பாவித்து மருத்துவ முறையை நடை முறை படுத்தினார். மேலும், அகத்தியர், மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா; மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே! என்கிறார்.
நமது முன்னோர்களும், சித்தர்களும் சொல்வது எழுந்தவுடன் காலை கடமைகளை செய்தவுடன் குளியல் .
ஆற்றில் குளிக்கும்போது, தொப்புள் கொடி முழ்கும் படி நின்று மந்திரம் கூறி குளித்தால், அது பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் , சித்தர்களும் சொல்லியுள்ளார்கள்…
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை . வீட்டில் குளிக்கும் போதும், உங்களுக்கு பிடித்த தெய்வங்களின் நாமங்கள் சொல்லி குளியுங்கள்… அது பலிக்கும் .
காலை எழுந்தவுடன், காலைக்கடன்களை முடித்து விட்டு குளியுங்கள்.. அதிகாலையிலேயே குளிப்பது உடலுக்கு இதமானது மட்டுமின்றி சுறுசுறுப்பையும் தரும்…
அதுமட்டுமின்றி குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது.
இது, வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .
உடலுக்கு ஊறுவிளைவிக்கும் பல்வேறு வகையான, புதுவகையான நொறுக்குத் தீணிகளை தவிர்ப்பது மிக முக்கியம்.
பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது , அடிக்கடி அசைவ உணவு உண்பது, துரித உணவுகளை (பாஸ்ட் புட்) உண்பது போன்றவைகள், செரிமானம் ஏற்படாமல், உடலில் பலவேறு வகையான நோய்களை தோற்றுவிக்கிறது…
சித்தர்கள் மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெறிபடுத்தி உள்ளனர்.. இதை கடைபுடித்தால், உடலில் உள்ள நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .
தொல்காப்பியத்தில் வரும் உணா என்ற சொல் உணவைக் குறிப்பதாகும். உணவுக்குத் தமிழில் உள்ள சொற்களைப் பிங்கள நிகண்டு “உணாவே வல்சி உண்டி ஓதனம். அசனம் பகதம் இசை ஆசாரம். உறை, ஊட்டம்” என வகைப்படுத்துகிறது. இவை தவிர புகா, மிசை என்னும் சொற்களும் உணவைக் குறிக்கப் பயன்பட்டிருக்கின்றன.
இதற்கு உரைகூறும் இளம்பூரணர் , நெல், காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், கோதுமை என எண்வகைத் தானியங்களைக் குறிப்பிடுகிறார்.
அதுபோல உணவு உண்பதை 5 வகையாக உண்ண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, பிங்கல நிகண்டு கறித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல் என கூறப்படுகிறது. இது . வடமொழியில் “பஞ்ச பக்ஷய பரமான்னம்” என்று அழைக்கப்படுகிறது.
இதை, உண்பன, தின்பன, கொறிப்பன, நக்குவன, பருகுவன என்பர். இந்தப் பாகுபாடு உணவின் தன்மை, உண்ணும்முறை, சுவை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
உண்பன என்பதற்கு, அரிசிச்சாதம், புழுங்கல், பொங்கல் போன்றன உதாரணங்கள்.
கொறிப்பன வரிசையில், சமைத்த காய்கறி கூட்டுகள் வரிசையில் பொரியல், அவியல், துவட்டல், துவையல் ஆகியனவும் வற்றல் வடாம் போன்றனவும் அடங்கும்.
நக்குவன வரிசையில் பச்சடி, கிச்சடி போன்றன வரும்.
பருகுவன என்பதில் பானகம், பாயகம், கஞ்சி, கூழ் ஆகியன அடங்கும். சிற்றுண்டிப் பண்டங் களை
தின்பன வரிசையில் அப்பம், இட்லி அடக்கலாம்.
அதுபோல, உணவின் சுவைகளை உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு என ஆறு வகைகளாகக் கூறுவதுண்டு.
தொல்காப்பியம், எள் தானியத்தை உணவுப் பொருளாகக் கூறுகிறது. அகநானூற்றில் கொள்ளும் (காணம்) பாலும் கலந்து வைத்த கஞ்சிபற்றிக் குறிப்பு வருகிறது. அவரை விதையை அரிசியுடன் கலந்து தயாரித்த கஞ்சிபற்றிய குறிப்பை மலைபடுகடாம் கூறுகிறது.
பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் பிற்காலக் கல்வெட்டுக்களிலும் அரிசியைப் பயன்படுத்திய விதம் பற்றிய தகவல்கள் வருகின்றன. தமிழகத்தின் மிகப் பழைய தொல்லியல் சான்று கிடைத்த ஆதிச்ச நல்லூர் மக்களிடம் அரிசி பயன்பாட்டில் இருந்தது.
‘சாதம்’ எனப் பொதுவாக இன்று வழங்கப் படும் அரிசிச் சோறு, பொது வழக்கில் சோறு என்றே வழங்கப்பட்டி ருக்கிறது. இன்று வழக்கில் சாதம் என வழங்குவது உயர்வாகக் கருதப்படு கிறது. என்றாலும் பழைய இலக்கியங்களிலும், கல்வெட்டு களிலும் சோறு என்னும் பெயரே பொதுவாகக் கையாளப்படுகிறது.
ஆற்றுக்குள் இருந்து அரகரா என்றாலும் சோற்றுக்குள் இருக்கிறான் சொக்க நாதன் – என்பது பழம் பாடல். சோறு என்பதற்கு அடிசில், அழினி, கூழ், அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை எனப் பல சொற்கள் இருந்தன.
பச்சரிசியால் பொங்கப்பட்ட சோற்றையும் பொங்கல் என்னும் புழுங்கல் அரிசியால் பொங்கப்பட்ட சோற்றைப் புழுங்கல் என்றும் அழைக்கப்பட்ட வழக்கம் இருந்திருக்கிறது.
சங்ககால ஒளவை, அதிகமான் நெடுமான் அஞ்சியை சிறு சோற்றாலும் நனிபல கலத்தன், பெருஞ்சோற்றாலும் நனி பல கலத்தன் என்கிறார். இதனால் சோறு, சிறுசோறு, பெருஞ்சோறு என வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது.
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் “பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையம்” என வருமிடத்தில் (சூத்60) இச்சோறு சுமங்கல காரியத்திற்குரியது என்ற பொருளில் குறிக்கப்படுகிறது. அகநானூற்றில் (பாடல் 110) சிறுசோறு என்ற சொல் மங்கல காரியத்திற்காகக் காட்டப்படுகிறது.
ஆனால், இன்று அந்த சோற்றை (அரிசி சாதம்) உண்ணக்கூடாது என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்… என்ன கொடுமை….
அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட அவல், பொரி இரண்டையும் பால் கலந்து சாப்பிடுவது என்னும் பழக்கம் ஆரம்பகாலத் தமிழகத்திலும் பிற்காலத்திலும் இருந்திருக்கிறது
நீர் கலந்த சோற்றுப் பருக்கையைக் கஞ்சி என்பது பொது வழக்கு. பிங்கல நிகண்டு கஞ்சிக்கு காடி, மோழை, சுவாகு என்னும் சொற்களைக் கூறும் தென்னிந்திய வாய்மொழிக் கதைகளும் புத்த சமயம் தொடர்பான நூற்களும் கஞ்சி குடிக்கும் வழக்கம் பொதுவானது என்கின்றன.
அரிசியால் தயாரிக்கப்பட்ட ஆப்பம், இடி ஆப்பம், பிட்டு, கும்மாயம், இட்டளி, தோசை போன்ற உணவு வகைகள் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் அரிதாகக் காணப்படுகின்றன.
பிற்காலச் சோழர் காலத்தில் இடிஆப்பம் என்னும் அரிசிப் பலகாரம் வழக்கில் இருந்திருக்கிறது. அதைப் பாலுடன் கலந்து சாப்பிட்டனர். இதற்குக் கல்வெட்டுச் சான்று உண்டு.
பெரும்பாணாற்றுப்படை கும்மாயம் என்னும் பலகாரத்தைப் பற்றிக் கூறுகிறது (அவித்த பயிற்றுடன் சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படுவது கும்மாயம்) இந்த உணவு பற்றி மணிமேகலை “பயிற்றுத் தன்மை கெடாது கும்மாயமியற்றி” எனக் கூறும். அம்பா சமுத்திரம் கல் வெட்டிலும் இந்தக் கும்மாயம் உணவு என்ற அர்த்தத்தில் கூறப்படுகிறது.
மதுரைக் காஞ்சி (624) மெல்லடை என்னும் அரிசி உணவைப் பற்றிக் கூறும். இது தோசை வடிவில் இருந்திருக்கலாம். புட்டு அல்லது பிட்டு எனப்படும் அரிசி உணவு பற்றிய செய்தி புராணங் களில் வருகிறது.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் கல்வெட்டு கூறும் பிட்டு குழாய் பிட்டு தான். தமிழ் வாய் மொழிப் பாடல் ஒன்று. குழாய்ப் புட்டு தயாரிப்பு பற்றிக் கூறும். இடித்த உதிர்மாவு, தேங்காய்த் துருவல், நாட்டு சர்க்கரை ஆகியவற்றின் சேர் மானம் குழாய்ப்புட்டு. ஒரு பாளையில் பல கவுர் குழாய்கள் உள்ள புட்டுக்குழல், பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளது.
இட்லி என்ற பலகாரம் தமிழகத்தின் உணவாகவே வெளி உலகில் அறியப்படுவது, இடு முதல் நிறையடியாகப் பிறந்த சொல் இது. இடல் என்ற தொழில் பெயர் பின்னர் இகர விகுதி பெற்று இட்டளி ஆனது. இது இட்லி எனவும் படும். இட்லி கி.பி.16ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டு வழக்கில் இருந்தது என்று கொள்ளலாம்.
கிருஷ்ண தேவராயரின் கல்வெட்டுதான் முதலில் தோசை என்னும் பலகாரம் பற்றிக் கூறும். தோசைக்கு அரிசி, உளுந்து, எண்ணெய் கொடுத்ததை இக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அச்சுதராயரின் கல் வெட்டு தோசைக்கு உளுந்து படியாகக் கொடுத்தது பற்றிக் கூறும்.
இந்தக் கல்வெட்டுக்கள் வைணவக் கோவில்களில் ஸ்ரீராம நவமியில் தோசை நைவேத்தியமாக அளிக்கப்பட்டதைக் கூறுகின்றன. இதனால் தோசை என்னும் பலகாரம் கி.பி.16ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்ததாகக் கொள்ளலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி சிவன் கோவிலிலும் தோசை நைவேத்தியம் செய்யப் படுகிறது. இவ்வளவு பிரசித்தி பெற்ற தமிழர்களின் உணவு பாரம்பரியம் சிதைக்கப்பட்டதே… இன்று அதிகரித்து வரும் நோய்களுக்கு அடித்தளமாக திகழ்கிறது…
உணவுகள் உண்ணும் முறை:
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி, பிறகு கால்களை மடக்கி தரையில் அமர வேண்டும் .
பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும். இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள்… இதில் ஜாதி, மதம் கிடையாது.
கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும், சக்கரை நோய் வராது,
உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும். நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் . இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள், ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ) நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.
தொண்டையை மீறி எந்த கிருமியும் வயிற்றுக்குள் செல்ல முடியாது .நம்முடைய உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை . தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது. சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள். கைகளை வைத்து ஒரவரின் நோய்களை அறியலாம் . நகம் , விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..
தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .
பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை என்று சொல்கிறது .
இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது, எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றிஉங்களுக்கு பிடித்தமான தெய்வங்களை நினைத்து, கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும் என்று சொல்கிறார் .
மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம், அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை , கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை, இதை மகான்கள் ,சித்தர்கள், இறை தூதுவர்கள் செய்தார்கள் ….
சுத்தமான எளிய உணவை ஒருவர் கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும். இதனால் அவரது கல்வி, திறமை, கலைகள் யாவும் வளரும்.
மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், செல்வம் பெருகும். பீடை ஒழியும். தெற்கு நோக்கி அமர்ந்து உண்பதால் அழியாத புகழ் உண்டாகும், சொல்வன்மை பெருகும்.
ஆனால், வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், அந்த உணவே நோயை உருவாக்கும். எனவே, வடக்கு நோக்கி உண்பதைத் தவிர்க்கவேண்டும் என்று பெரியவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏன் என்றால், கிழக்கு திசை இந்திரனுக்கு சொந்தமானது. இதனால் அவரது கட்டளைக்குட்பட்ட புதனும், குருவும் அறிவைக் கொடுப்பார்கள். மேற்கு திசையின் அதிபதியான மகாலட்சுமி செல்வத்தை வாரி வழங்குவதில் ஆச்சர்யமில்லை. வடக்கு திசை ருத்திரனுக்கு உறைவிடம் எனவே, அது நோயை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
அதுபோல உணவினை கைகளால்தான் உண்ணவேண்டும். நன்கு சுத்தம் செய்த கரத்தால் உண்பதே பல நோய்களை வரவிடாமல் தடுக்கும்.
கைகளால் உணவை அள்ளி உண்ணும்போது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவைக் கைகளால் உண்ணும்போது உடலின் நரம்புகள் நாம் உணவு உண்கிறோம் என்ற செய்தியை மூளைக்கு அனுப்புகிறது. இதனால், ஜீரணம் மிக எளிதாக நடை பெறுகிறது.
ஐந்து விரல்களையும் குவித்து உண்பது ஒரு சூட்சும முத்திரை நிலை. இதனால் ஜீரண மண்டலம் துரிதமாகச் செயல்படுகிறது.
இதை எந்த ஸ்பூனும் குச்சியும் தருவதில்லை.
உணவு உண்ணும் நேரம்…
1. காலை உணவை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. காலை உணவானது முதல் நாள் இரவு முழுக்க வயிற்றை வெறும் வயிற்றில் வைத்திருந்து, நீண்ட நேர இடைவெளிக்குப் பின்னர் சாப்பிடுவது.
காலையில் சரியான நேரத்துக்கு நன்கு உணவு உண்டால், அன்றைய வேலைகளைச் சிறப்பாகச் செய்யக்கூடிய ஆற்றல் நம் உடலுக்குக் கிடைக்கும்.
2. மதிய உணவை 12 முதல் 2 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது. அதிகபட்சம் 3 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில், மதிய உணவுதான் ஒரு நாளில் நாம் சாப்பிடும் அதிக அளவு உணவு. உடல் தொடர்ந்து இயங்கத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்தது.
3. இரவு உணவை மாலை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது சிறந்தது. அதிகபட்சம் 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். தாமதமாக இரவு உணவைச் சாப்பிட்டால், செரிமானக் கோளாறுகள், தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம்.
4.குறிப்பாக இரவு உணவுக்கு இட்லி, சாம்பார், தோசை, சப்பாத்தி, உப்புமா, கோதுமை உணவுகள், பருப்பு வகைகள், ராகி, கம்பு, தேன், பால் போன்றவற்றை தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகச் சாப்பிட வேண்டும்.
எளிமுறையான இந்த உணவுப் பழக்க வழங்கங்களுக்கு மாறுங்கள்… நோய் நொடியின்றி ஆரோக்கியமான வாழ்வினை பெறுங்கள்..
தொகுப்பு: Dr. நிவேதா BHMS.,