சென்னை:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழகத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள பிரபலமான கடற்கரையான மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், வணிக நிறுவனங்கள், மால்கள், சுற்றுலா ஸ்தலங்கள், பொழுதுபோக்கு பூங்காங்கள், வழிபாட்டு தலங்களை மூட உத்தர விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னை மக்களின் பொழுதுபோக்கு இடமான மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பாலவாக்கம், திருவான்மியூர் உள்பட அனைத்து கடற்கரை பகுதிகளும் இன்று மாலை 3 மணி முதல் மூடப்படுவதாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று அறிவித்து உள்ளது.
இந்த அறிவிப்பு காரணமாக, கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா நோய் பரவலை தடுக்க நாம் ஒவ்வொருவரும், முக்கியமாக கைகளை சுத்தமாக கழுவுதல், கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தல், ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு இருத்தல் அவசியம்…
[youtube-feed feed=1]