சென்னை:

மிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் பழனிச்சாமி.

பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை குடியிருப்புகளுக்கு அருகிலேயே விநியோகிக்க வசதியாக ரூ.9 கோடியே 66 லட்சத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்கப்படும் என்று  அறிவித்துள்ளார்.

உள்கட்டமைப்பு வசதியைமேம்படுத்தி, வாடிக்கையாளர் களுக்கு நவீன வங்கி சேவையை வழங்குவதற்காக 95 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 6 மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளுக்கும் தலா ஒரு நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவுக் கடன் சங்கம், தொடக்க கூட்டுறவு பண்டக சாலை, பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கம் என மொத்தம் 105 கூட்டுறவு கடன் நிறுவனங்களுக்கு ரூ.27 கோடியே 74 லட்சத்தில் சொந்த அலுவலக கட்டிடங்கள் கட்டப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் வணிக வங்கிகளுக்கு இணையாக புதிய வசதிகளுடன் கூடிய நவீன வங்கிச் சேவையை வழங்க 74 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மத்திய கூட்டுறவு வங்கிகள், 3 நகர கூட்டுறவு வங்கிகள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், ஒரு தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி என மொத்தம் 95 கூட்டுறவு நிறுவனங்கள் ரூ.14 கோடியே 75 லட்சத்தில் நவீனமயமாக்கப்படும்

இவ்வாறு அறிவித்துள்ளார்.