https://www.instagram.com/p/B95Pg0-lI6d/

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 206ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் இதுவரை நான்கு பேர் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதிலிருந்து இதுவரை 13,486 பேரிடம் 14,376 மாதிரிகள் பெறப்பட்டு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் இருக்கும் நேரத்தை ஓவியம் தீட்டுவதில் செலவு செய்து வருகிறார். தான் ஓவியம் தீட்டும் வீடியோ ஒன்றை நேற்று (19.03.20) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சல்மான் கான். அந்த வீடியோவின் தொடக்கத்தில் ‘நமது ஆடை அணியும் முறைதான் கலாச்சாரம் செய்ததிலேயே மிகச்சிறந்த விஷயம்’ என்று கூறும் சல்மான் ஒரு ஆணின் முகமும் ஒரு பெண்ணின் முகமும் கொண்ட ஒரு ஓவியத்தைத் தீட்டத் தொடங்குகிறார்.

இந்த வீடியோ இதுவரை 20 லட்சம் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

[youtube-feed feed=1]