டில்லி

ஞ்சன் கோகாய் தான் ஊதியம் பெற மாடடேன் என அறிவித்துள்ளார்

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராஜ்யசபா எம்.பி.யாக நியமிப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சில வழக்குகளில் கோகாய், அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதால்,’ ராஜ்யசபா எம்.பி.பதவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது’’ என்று அவரை நோக்கி கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்த களேபரங்கள் குறித்து கொஞ்சமும் அலட்டி கொள்ளாத கோகாய் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் ஆங்கில இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த கோகாய், மவுனம் கலைத்தார்.

தன் மீதான விமர்சனங்களுக்கு, சுடச்சுட பதில் அளித்து, தன் கோபத்தை குறைத்து கொண்டார்.

கோகாய் பேட்டியின் சுருக்கம்:

‘’நான் வழங்கிய தீர்ப்புகளுக்காக ராஜ்யசபா எம்.பி.பதவி கிடைத்ததாக என்னை விமர்சனம் செய்கிறார்கள். பரிசு பெற நான் நினைத்திருந்தால், நிறைய வருமானம் வரும்-செல்வம் கொழிக்கும் பதவியை அல்லவா கேட்டிருப்பேன்.

முன்னாள் நீதிபதிக்கு வழங்கப்படும் ஓய்வு ஊதியத்துக்கு நிகராக ஊதியம் கிடைக்கும் எம்.பி. பதவியை ஏன் கேட்க வேண்டும்?

இந்த பதவியில் எனக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் அலவன்சை நான் வாங்கப்போவதில்லை. சிறு நகரங்களில் உள்ள சட்டக்கல்லூரிகளின் நூல் நிலையங்களை மேம்படுத்த இந்த சம்பளத்தை கொடுப்பேன்’’ என்று ஓய்ந்தார், கோகோய்.

– ஏழுமலை வெங்கடேசன்

[youtube-feed feed=1]