
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. ஜீ ஸ்டுடியோஸ் வழங்க, போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகப் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீரஷ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். ‘வலிமை’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று போனி கபூர் அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் அஜித்துக்கு நாயகியாக நடிக்கும் ஹியூமா குரேஷி அஜித்துடன் பைக் சண்டைக்காட்சிகளிலும் நடிக்கவுள்ளார்.
அடுத்தகட்டப் படப்பிடிப்பில் அஜித் – ஹியூமா குரேஷி இணைந்து வில்லன் ஆட்களுடன் சண்டையிடும் காட்சிகளைப் படமாக்குவார்கள் எனத் தெரிகிறது.
[youtube-feed feed=1]