டெல்லி:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்தி வைக்க பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் தனது கைவரிசையை காட்டி வருகிறது. இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதுவரை, 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் இதுவரை 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பள்ளிக் கல்லூரிகளுக்கு மார்ச் 31ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்வுகளையும் தள்ளி வைக்க அறிவுறுத்தி உள்ளது.