புதுதில்லி: கொரோனாவைரஸ் நோயறியும் சோதனையை செய்ய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ரோச் லேபராட்டரிஸ் நிறுவனம் சார்ஸ் Covid-2 பரிசோதனைக்கான சோதனை உரிமத்தை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பெற்றுள்ளது
இதற்கிடையில், இரண்டு இந்திய நோய் கண்டறியும் நிறுவனங்கள் — டிரைவிட்ரோன் ஹெல்த்கேர் மற்றும் மைலேப் டிஸ்கவரி ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்களும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மற்றும் மத்திய மருந்துகள் தரநிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஆகியவற்றின் ஒப்புதல்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக கூறியுள்ளன
ரோச் டயனாஸ்டிக் இந்தியா சுவிட்சலாந்து நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது
ரோச் டயனாஸ்டிக் இந்தியா வின் செய்தித் தொடர்பாளர் , கொரோனாவைரஸ் நோயறியும் ஆய்வகத்திற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (USFDA) அங்கீகாரம் சில நாட்களுக்கு முன்னர் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தனியார் ஆய்வகங்கள் வழியே சோதனை தொடங்கும் போது, கொரோனாவைரஸ் நோயறியும் சோதனை முடிவுகள், மிகவும், வேகமாக வழங்கப்படும். இப்போது நோயறியும் சோதனை முடிவுகள் இரண்டு, மூன்று நாட்களில் கிடைக்கிறது. ஆனால் இந்நிறுவனங்கள் இரண்டரை மணி நேரத்தில், இருந்து ஐந்து மணி நேரத்திற்குள் ,நோயாளிகளிடம் பரிசோதனை முடிவுகள் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கின்றன
சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் மருத்துவ சாதன நிறுவனமான டிரைவிட்ரோன் ஹெல்த்ரான் தனது வாடிக்கையாளர்களின் நேரத்தினை மிச்சப்படுத்த முயற்சிகள் எடுப்பதாகவும், மூன்று மணி நேரத்தில் இருந்து ஐந்து மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகளை கொடுக்க முயற்சிக்கின்றது என்றும் தெரிவித்தனர்
மைலேப்
மைலேப் நிறுவனம் Made in India திட்டத்தின்உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
புனே நகரை மையமாகக்கொண்டு இயங்கும் இந் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்த கருவிகள் மூலம் இரண்டரை மணிநேரத்திற்குள் பரிசோதனை முடிவுகளை அளிக்கும் “என்று மைலேப் டிஸ்கவரியின் நிர்வாக இயக்குநர் ஹஷ்முக் ராவால் தெரிவித்தார்.
2019 இல் மைலேப், எச். ஐ. வி, ஹெபடைடிஸ் பி மற்றும் சி சோதனை செய்ய RT-PCR அடிப்படையிலான கிட்கள் இந்தியாவின் முதல் FDA-அங்கீகரிக்கப்பட்ட மூலக்கூறு பகுப்பாய்வுக் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
டிரைவிட்ரான் நிறுவனம்
சென்னையை மையமாகக்கொண்டு இயங்கும் டிரைவிட்ரான் நிறுவனம் நாளொன்றுக்கு 7.5 லட்சம் சோதனை கருவிகளை உற்பத்தி செய்ய முடியும் என்றும்
டிரைவிட்ரான் ஹெல்த்கேர் நாட்டின் COVID-19 க்கான முதல் சுதேசி கிட் என்று அழைக்கிறது.
COVID-19 தொடர்பாக ஆய்வுகளையும் கருவிகளைத் உருவாக்க தங்களின் ஆராய்ச்சி மையம் உருவாக்க மையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ .4 முதல் 5 கோடி அவசர நிதிகளை ஒதுக்கியுள்ளோம் என்றும் டிரைவிட்ரான் ஹெல்த்கேர் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான வேலு தெரிவித்தார்
டிரைவிட்ரான் ஆய்வகம் தனது பரிசோதனை முடிவுகளை கொடுக்க 3-5 மணி நேரமாகக் குறைக்க முயற்சிக்கிறது. என்றும் தெரிவித்தார்
மேலும் சீனாவில் உள்ள எங்கள் கூட்டு நிறுவனமான லேப் சிஸ்டம் ஸ்ண்டோங் மையத்தின் கருவிகள் அங்கு அங்கீகரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. எனவே சீனாவில் நாங்கள் பெற்ற நிபுணத்துவத்தையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம், ”என்று அவர் கூறினார்.
கொரோனாவைரஸ் பெருந்தொற்றினால் இன்று உலகம் முழுதும் பல கோடி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் அளவு விஸ்வரூபமாக வளர்ந்துள்ளது.
இந்த பரிசோதனை முடிவுகளை கண்டறிய ஏறக்குறைய மூன்று முதல் 5 நாட்கள் காத்திருக்கவேண்டும். ஆனால் தனியார் நிறுவனங்கள் முன்னெடுப்பால் சில மணி நேரங்களில் கிடைக்கும் அளவு முன்னேறியிருக்கிறது.
அதேசமயம் வெளிநாட்டினை மட்டும் நம்பியில்லாமல் இந்திய நிறுவனங்களும் ஆய்வுக்கருவிகளை உற்பத்தி செய்வது சிறந்த ஒன்று
அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா பெருந்தொற்றினை ஒழிப்போம்
செல்வமுரளி