லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .

இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்க சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் இப்படத்தில் உள்ளது .

இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா நடித்துள்ளார் .

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த ஞாயிற்று கிழமை வெகு விமரிசையாக நடத்தினர். இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வரும் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தார். .

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஜேம்ஸ் துரைராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் அணியும் காலேஜ் ஐடி கார்டு தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

கல்லூரியின் பெயரோடு வெளியாகியிருக்கும் அந்த ஐடி கார்டில் விஜய் மாணவர் அஷோசியேஷன் டீன் பொறுப்பில் நடித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

[youtube-feed feed=1]