பெய்ஜிங்: இன்று வரை உலகத்தையே கலக்கிவரும் கொரோனா வைரஸ் பற்றிய ஒரு ஆய்வில் ஏ இரத்த வகைக்குழு ( +, A-, AB+, AB-) இரத்த வகை உள்ளவர்கள் மட்டுமே அதிகமாக கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதே சமயம் இரத்த வகை ‘O’ இரத்த வகை உடையவர்களுக்கு ஆபத்து குறைவு என்றும் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு இன்னமும் மதிப்புரை செய்யப்படவில்லை
முதலில் இந்த இரத்த வகை எதற்கு என்று தெரிந்துகொள்ளலாமா?
இரத்த வகை
A வகை
B வகை
AB வகை
O வகை
என பிரிக்கப்படுகிறது
நமது இரத்தத்தில் பிளாஸ்மா, சிவப்பணு, வெள்ளையணு, இரத்தத்தட்டுக்கள் இவற்றுடன் சில ஆன்டிஜென் (antigen), சில ஆன்டிபாடி (antibody) இவைகளும் இருக்கின்றன. இவற்றின் அடிப்படையில் நம் இரத்தம் வகைப்படுத்தப் படுகிறது.
எந்த வகை ஆன்டிஜென் நம் இரத்தத்தில் இருக்கிறதோ, அதுவே நமது இரத்த வகையாகும். A வகை ஆன்டிஜென் இருந்தால் A வகை இரத்தம். B வகை ஆன்டிஜென் இருந்தால் B வகை இரத்தம். இரண்டும் இருந்தால் AB வகை இரத்தம். இரண்டும் இல்லையெனில், O வகை இரத்தம்.
எந்த வகை ஆன்டிஜென் நம் ரத்தத்தில் உள்ளதோ, அதன் எதிர் வகை ஆன்டிபாடி நம் ரத்தத்தில் இருக்கும். ஒரே வகை ஆன்டிஜென் மற்றும் ஆன்டிபாடி கலந்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இரத்தத்தை உறையச் செய்து இரத்த ஓட்டத்தை நிறுத்தி விடும். இதனால்தான் இரத்தவகை அறிந்து பரிமாற்றம் செய்வது அவசியமாகிறது.
சரி இப்போது விசயத்திற்கு வருவோம்
சீனாவில் இருந்து உலகம் முழுதும் பரவியுள்ள கொரோனாவைரஸ் பெருந்தொற்று பற்றி பல வகையான ஆய்வுகள் சீனாவில் நாள்தோறும் நடத்தப்பட்டுவருகிறது. பல வகையான ஆராய்ச்சியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனையின் ,வாங் ஜிங்குவான், ஷாங்னான் மருத்துவமனையின் தகவல் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் ஏ இரத்த வகை உள்ளவர்களுக்கு கொரோனாவைரஸ் எளிதில் தொற்றிக்கொள்ளும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்
(A +, A-, AB+, AB-) இரத்த வகை உள்ளவர்கள் மட்டுமே அதிகமாக கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதே சமயம் இரத்த வகை ‘O’ இரத்த வகை உடையவர்களுக்கு ஆபத்து குறைவு என்றும் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது
ஆராய்ச்சியாளர்கள் வுஹான் மற்றும் ஷென்சென் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்ட 3,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இரத்த மாதிரிகளைக்கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்
இரத்தப்பரிசோதனை மற்றும் கணக்கீட்டு அறிக்கை
image credit : https://www.gnxp.com/
உலக அளவில் இரத்த வகையக் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்ட படம்
உலக அளவில் ஏ இரத்த வகை உள்ளவர்கள்’
உலக அளவில் பி இரத்த வகை உள்ளவர்கள்
உலக அளவில் ஓ இரத்த வகை உள்ளவர்கள்
images credits : wikipedia.org
முழு ஆய்வு விபரம்
https://www.medrxiv.org/content/10.1101/2020.03.11.20031096v1.full.pdf
செல்வமுரளி