டில்லி
உலகெங்கும் தற்போது வரை கொரோனா வைரஸால் 1,84,976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7529 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 159 உலக நாடுகளில் காணப்படுகிறது. சீனாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால் பிற நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதனால் உலக மக்கள் கடும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 3526 புதிய நோயாளிகளுடன் மொத்தம் 31506 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மரணம் அடைந்தோர் எண்ணிக்கை345 அதிகரித்து 2503 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் இணைந்து மொத்தம் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
துருக்கியில் நேற்று இரவு கொரோனா வைரஸ் தாக்குதலின் முதல் மரணம் நிகழ்ந்துள்ளது.
துனிசியாவில் இன்று முதல் மாலை ஆறு மணிக்கு தொடங்கி காலை எட்டு மணி வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அர்ஜெண்டினாவில் நேற்று மட்டும் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 79 பேர் பாதிக்கப்பட்டு இதில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
ஜாம்பியாவில் கொரோனா பாதிப்பு அடைந்த முதல் நபர் பற்றிய விவரம் வெளி வந்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்துள்ள 20 வயதுப் பெண் பாதிப்பு அடைந்துள்ளார்.
போலந்து நாட்டில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 61லிருந்து 238 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
நியுஜிலாந்தில் நேற்று வெளிநாட்டுப் பயணம் செய்து திரும்பி வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது.