கொரோனா பாதிப்பு காரணமாக, மக்களிடம் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து வரி, வாடகை, மின்கட்டணம் உள்பட எந்தவொரு கட்டணமும் வசூலிக்க வேண்டாம், அவைகளை நிறுத்தி வையுங்கள் என்று அதிகாரிகளுக்கு பிரான்ஸ் அதிபர் உத்தரவிட்டு உள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பிரான்சிலும் ருத்ர தாண்டம் ஆடி வருகிறது. அங்கு இதுவரை 6600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கையும் 148 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்துவரும் அரச, தற்போது, பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில், நிறுவனங்களுக்கான வரி, வாடகை, நீர், எரிவாயு மற்றும் மின்சார கட்டணங்களை செலுத்துவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளார்…
Patrikai.com official YouTube Channel