சென்னை:

திமுக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் எம்எல்ஏ விலகுவதாக திமுக தலைமையகத்தில் கடிதம் கொடுத்துள்ளார். அதை ஏற்றுக்கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவைத் தொடர்ந்து, அவரது பொதுச்செயலாளர் பதவியைப் பெறப்போவது யார் என்ற கேள்வி திமுக தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது.  அதைத் தொடர்ந்துரு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வருகிற 29 ம் தேதி திமுக பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும் என்றும் திமுக தலைமை அறிவித்தது.

இந்த தேர்தலில் போட்டியிடும் வகையில், பொருளாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விழைவதால், பொருளாளர் பொறுப்பிலிருந்து அவர் விலகுவதை, தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]