மும்பை: பிசிசிஐ அமைப்பின் கமெண்ட்டரி பேனலிலிருந்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேனும், புகழ்பெற்ற வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சமீப ஆண்டுகளாக இந்தியாவின் உள்நாட்டுத் தொடர்களில் நீங்காத இடம்பெற்ற வர்ணைனையாளராக இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், ஏப்ரல் மாதம் 15ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்ட 13வது ஐபிஎல் சீஸனில் இவர் வர்ணனையாளராகப் பங்கேற்கமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில், இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் கைவிடப்பட்ட இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டியில் மஞ்ச்ரேக்கரை  காண முடியவில்லை. ஆனால், கவாஸ்கர், லஷ்மண் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட இதர வர்ணனையாளர்கள் அங்கிருந்தனர்.

இவரின் நீக்கத்திற்கு உண்மையான காரணம் எது என்ற விபரம் வெளியாகவில்லை. அதேசமயம், அவரின் பணியில் பிசிசிஐ அதிகாரிகளுக்கு திருப்தியில்லாத காரணத்தால், இந்த நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]