டெல்லி:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் சீனாவின் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தனது வக்கிரத்தை காட்டி வருகிறது. ஏற்கனவே கர்நாடகாவில் ஒருவர் இறந்த நிலையில், 2வதாக டெல்லியில் 69 வயது நபரும், 3வதாக கேரளாவில் ஒருவரும் பலியாகி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன…
சீனாவில் இருந்து, வெளியாகி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிலும் பரவியது. இந்தியாவில் இதுவரை 82 பேர்கள் கொரோனா வைரஸால்தாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதற்கிடையில், கர்நாடக மாநிலத்தில் 76 வயது முகமது சித்திக் என்பவர் கொரோனா வைரஸால் உயிரிழந்தார். இதையடுத்து டெல்லியில் டெல்லியை சேர்ந்த 69 வயது பெண் ஒருவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், கேரளாவின் கோட்டயம் பகுதியில் 72வயது முதியவர் ஒருவர் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா பலி 3 ஆக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை ஹெல்ப் லைன் தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது.
அதன்படி +91-11-23978046ஐ தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி மாநிலங்கள் வாரியாகவும் ஹெல்ப்லைன் எண்களை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் 044 29510500 என்ற எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.