சிட்னி:
‘கொரோனா பாதிப்பின் எதிரொலியாக ரசிகர்கள் இல்லாம் சிட்னியில் நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தின்போது, பேட்ஸ்மேன் அடித்த சிக்ஸர் பால்களை எடுத்து வீச ரசிகர்கள் இல்லாத சோகம் நிகழ்ந்தது…..
உலக நாடுகளுளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் விளையாட்டு போட்டிகளையும் விட்டுவைக்கவில்லை என்பது, ஐபிஎல் உள்பட பல போட்டிகள் தள்ளி வைக்கப்பட்திலும், ரத்து செய்யப்பட்டிருப்பதில் இருந்தே அறிந்துகொள்ளலாம்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா வுக்கு சென்றுள்ளது.
இன்று ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையே முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஆட்டத்தை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் வீரர்கள் மற்றும் அம்பயர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில், ஆட்டம் நடைபெற்றது. ரசிகர்கள் இல்லாமல் நடந்து வருகிறது
பார்வையாளர்கள் இன்றி வெறிச்சோடிய ஸ்டேடியத்தில், ஆட்டத்தின்போது பேட்ஸ்மேன்கள் அடிக்கும் சிக்ஸர் பால்கள் கேலரிக்குள் பறந்த நிலையில், அதை அடுத்து வீசக்கூட ரசிகர்கள் இல்லாத கொடுமையான நிலை உருவானது…
இதனால் வீரர்களே பால்களை கேலரிக்குள் தேடித் திரிந்து எடுத்து வரும் சோகம் ஏற்பட்டது. அதே வேளையில் பேட்ஸ்மேன்களும் அதிக அளவில் சிக்ஸர்களை விளாச, ஒவ்வொரு சிக்ஸரின்போதும் பந்தை தேடிப்பிடித்து எக்க சுமார் 15 நிமிடங்கள் வரை நேரம் விரயமானது…
இது கிரிக்கெட் வரலாற்றில் விசித்திரமான நிகழ்வாக தோன்றியது…
வீரர்கள் பந்தைத் தேடி கேலரிக்குள் திரியும் காட்சி….
