லக்னோ:

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, உ.பி. மாநிலத்தில் வரும் 22ந்தேதி வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்து உள்ளார்.

இந்தியாவிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லி தனிமைப்படுத்தப்பபட்டு உள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. மக்கள் கூடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில்  பள்ளிக் கல்லூரிகளும் மூடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், உ.பி.மாநிலத்தில்அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் மார்ச் 22 வரை மூடப்படும் என்றும், மார்ச் 22 ஆம் தேதி நிலைமையை  மதிப்பாய்வு செய்து, விடுமுறை நீடிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று  முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.