தமிழ், தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நாயகியாக நடித்தவர் கனிகா.

தமிழில் ‘பைவ் ஸ்டார்’, ‘வரலாறு’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார் கனிகா.

”முதல் முறையாக கேமராவுக்குப் பின்னால். என்னில் இருக்கும் உணர்வுள்ள, கற்றுக்கொள்ள ஆசைப்படும் எண்ணம் முதல் முறையாக இயக்கம் செய்யப் பணித்திருக்கிறது. என் இதயத்துக்கு நெருக்கமான ஒரு கதையுடன் குறும்படத்துக்குத் தயாராக இருங்கள். போஸ்ட் புரொக்டஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன”.என தனது இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]