உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தனது வேகத்தை அதிகரித்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது… இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், முதல் பலி கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
இதன் காரணமாக இந்திய மக்கள் கொரோனா தொற்று குறித்து அச்சத்துடனேயே காணப்பட்டு வருகிறார்கள்… அதற்கேற்றார் போல அரசு மற்றும் சமூக அமைப்புகள் வெளியிடும் அறிவிப்புகள், பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டிலேயே அமர்ந்து பணியாற்றச் சொல்லும் நிலை போன்றவற்றால் பொதுமக்கள் பீதியடைந்து வருவதும் அதிகரித்து வருகிறது…
உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வைரஸ் தொற்று நோய்கள் பரவி மக்களை காவு வாங்கி வருகின்றன… ஏற்கனவே பிளேக், காலரா, சார்ஸ் போன்ற கொள்ளை நோய்கள் மக்களை கொத்துக்கொத்தாக சாகடித்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது பரவி வரும் கொள்ளை நோயான கொரோனா மக்களிடையே மரண பீதியை ஏற்படுத்தி வருகிறது….
இதற்கு காரணம், நோயை தடுக்க மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவலும், தேவையற்ற வதந்திகளுமே காரணம்…
இதுபோன்ற சூழலில் மக்களிடையே அச்சத்தைப் போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பான பல்வேறு செய்திகளை உங்கள் பத்திரிகை டாட் காம் இணையதளம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது….
அதன் தொடர்ச்சியாக தற்போதும், கொரோனா தொற்று எப்படி ஏற்படுகிறது, கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிம்ப்டம்ஸ் (அறிகுறிகள்) என்ன, அதை தடுப்பது எப்படி என்பது குறித்து எளிய முறையில் உங்களுக்கு தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது…
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் என்பது ஒருவகையான தொற்று வைரஸ்…என்றும், வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் அறிவியலாளர்களும், ஆய்வாளர்களும் கூறி உள்ளனர். இது விலங்குகளில் இருந்து பரவுவதாக கூறப்படுகிறது. சீனாவின் வுகான் மாநிலத்தில் உள்ள ஒரு மாமிசச் சந்தையில் இருந்துதான் கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. மனிதர்கள் மற்றும் பறவைகளை எளிதில் தாக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த கொரோனா தொற்று, சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம். கொரோனா வைரஸ் அல்லது Sars-CoV-2, கோவிட்19 என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
கொரோனா அறிகுறி
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் லேசான ஜுரம் ஆரம்பிக்கும்… . பின் வறட்டு இருமல், நாளாக நாளாக சுவாசக் கோளாறுகள் ஏற்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இருந்தாலும், இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை என்றும், அதற்கான சோதனைகள் மூலமே உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது… இதனால் முகக்கவசம் அணிய வலியுறத்தப்பட்டு வருகிறது..
கொரோனா அறிகுறி எப்போது தெரியவரும்…
கொரோனா தொற்று தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை ஏற்படும். இந்த அறிகுறிகள் சரியாக தெரிய வர குறைந்தது 5 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா உயிரை பறிக்குமா?
கொரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்ட உடனே அதற்கான சோதனை மேற்கொண்டால், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க முடியும்…
சரியான முறையில் சிகிச்சை பெறாமலும், மக்களிடையே விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலுமே உயிர்பலி ஏற்படுகிறது…
கொரோனாவை குணப்படுத்தலாம்…
கொரோனா தொற்றை குணப்படுத்த மருந்து இல்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில், நமது உடலில், தேவையான அளவு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், கொரோனா தொற்று என்ன எந்தவொரு தொற்றாலும் ஒன்றும் செய்ய முடியாது…
இதை தடுக்க ஆன்டி பாக்டீரியல் மருந்து தேவை… ஆனால், சித்த மருத்துவர்கள் நிலவேம்பு கசாயம் போன்ற பல்வேறு மருந்துகளை பரிந்துரைத்து வருகின்றனர். ஏற்கனவே டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்தவும், மனிதரின் இம்யூனிட்டி பவர் அதிகரிக்கவும் நிலவேம்பு கசாயம் குடித்தது அனைவரும் அறிந்த விஷயம்தான்…
அதேவேளையில் நோயாளிகள் தும்முவதில் இருந்து வைரஸ் பரவுவதால், ஒருவர் தும்மும்போது, முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்றும், அல்லது முகக்கசவசம் அணிவதாலும், நோய் பரவுவதை தடுக்க முடியும்..
மேலும் நோய் தொற்று பரவாதவாறு, அவ்வப்போது, கைகளை நன்றாக சுத்தம் செய்வதும் அவசியம்..
அதுபோல, காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள உடனே மருத்துவமனை அணுகி தேவையனா சிகிச்சை பெற வேண்டியதும் அவசியம்…
கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்பு உள்ளதாக ஏதேனும் அறிகுறி தென்பட்டால், முதலில், அவர்கள் மற்றவர்களிடம் இருந்து தனிப்படுவது அவசியம்.. மற்றும், தங்களது முகத்தில் முகமூடி அணிந்து, தேவையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்…
கொரோனா – அறிந்து கொள்வது எப்படி?
சளி , இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே தங்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
அதன்படி, swab test எனப்படும், காது குடையப் பயன்படும் ஒரு ஸ்வாப் மூலம் நம் தொண்டை அல்லது மூக்கிலிருந்து மாதிரி (sample) எடுத்துக்கொண்டு, பரிசோதனை ஆய்வகத்தில் கொடுத்து சோதனை செய்யலாம்.
அது மட்டுமின்றி, A nasal aspirate என்ற முறையில், ஊசி மூலம் ஒரு திரவத்தைச் செலுத்தி, அதன் மூலம் தேவையான மாதிரி உறிஞ்சி எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வு செய்யலாம்.
இதுமட்டுமின்றி, bronchoscope என்ற ஒரு மெல்லிய குழாயை நுரையீரலுக்குள் செலுத்தி, அங்கிருந்து மாதிரி எடுத்தும், ஒருவரை இரும வைத்து, அதிலிருந்து கிடைக்கும் கோழைச்சளி மாதிரியாக எடுத்தும் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்… இதுமட்டுமின்றி ரத்த பரிசோதனையும் அவசியம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக ஆய்வு செய்ய தமிழகத்தில் 2 ஆய்வகங்கள் உள்பட நாடு முழுவதும் 52 அதிகாரப்பூர்வ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்னென்ன?
மக்கள் தொகையில் சீனாவுக்கு அடுத்தப்படியாக உள்ள இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.. இருந்தாலும், நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது….
இந்த வைரஸ் தாக்குதல் மற்றும் தடுப்பது குறித்து, நாடு முழுவதும் உள்ள சுகாதாரத் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும், அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வார்டு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பள்ளி, பணி மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது. மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமிருந்து தள்ளி இருங்கள் என்று தெரிவித்து உள்ளது.
தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 118 நாடுகளுக்கு பரவியுள்ளது. முதலில் சீனாவில் பரவத்தொடங்கிய தற்போது பல நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுவரை 4720 பேர் உயிரழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.