சென்னை: கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவின் சில பகுதிகளில் தீவிரமாகிவரும் நிலையில், மருத்துவக் காப்பீட்டை கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், முடியும் என்ற மகிழ்ச்சியான பதில் கிடைத்துள்ளது.
ஆனால், அதற்கான விதிமுறைக்ள என்ன என்பது பற்றி விரிவான விபரங்கள் கிடைத்துள்ளன. மருத்துவக் காப்பீடு வைத்துள்ள நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர் எந்தமாதிரியான வகைப்பாடுகளில் காப்பீட்டு பலனை, கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்காக அனுபவிக்க முடியும் என்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி;
* கொரோனா சிகிச்சையின்பொருட்டு, குறைந்தபட்சம் 24 மணிநேரமாவது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், கொரோனா சிசிச்சையின் பேரில், பாலிசியை கிளைம் செய்ய முடியாது.
* உலக சுகாதார நிறுவனத்தால்(WHO) ஒரு ஒருநோய், ஒரு கொள்ளை நோயாக அறிவிக்கப்பட்டிருந்தால், அந்நோய் தொடர்பான சிகிச்சைக்கு பாலிசி கிளைம் செய்ய முடியாது.
* கடந்த 4 வாரங்களுக்கும் மேலாக, சுவாசம் தொடர்பான வேறு வகையான நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் கொரோனா சிகிச்சைக்காக கிளைம் செய்ய முடியாது.
* பாலிசி வாங்கிய பிறகான காத்திருப்புக் காலத்திற்குள், கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டால், அதாவது, நோய்க்கான சிகிச்சை காத்திருப்பு காலத்திற்குள் விலக்கப்பட்டிருந்தால், பாலிசியில் கிளைம் செய்ய முடியாது.
* கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து புறப்பட்டிருந்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்து, இந்தியாவில் தங்குமிடத்திலேயே தனித்திருந்தால், பாலிசி கிளைம் செய்து கொள்ளலாம்.