சிட்னி
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவர் மனைவி ரீட்டா வில்சன் ஆகியோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைர்ஸ் உலகெங்கும் பரவி உள்ளது. உலகெங்கும் சுமார் 4500க்கும் மேற்பட்டோரைப் பலி வாங்கிய இந்த வைரஸால் சுமார் 1.24 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலில் சீனா முதல் இடத்திலும் இத்தாலி இரண்டாம் இடத்திலும் தென் கொரியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
உலக சுகாதார மையம் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கொள்ளை நோய் என அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்து நாட்டுச் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவர் மனைவி ரீட்டா வில்சன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
தற்போதுபடப்பிடிப்புக்காக தனது மனைவியுடன் டாம் ஹாங்க்ஸ் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு அவருக்கும் அவர் மனைவிக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இது குறித்து அவர் தனது டிவிட்டரில், இது குறித்து பதிவுட்டுள்ளர். அந்த பதிவில் அவர் தற்போதைய நிலையில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுவது மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.