லண்டன்: பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

சீனாவின் உகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரிட்டன் சுகாதாரத்துறை துணை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி எம்பியுமான நடீன் டோரீஸிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நடீன் டோரீஸே உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து நடீன் டோரீஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சமீபத்தில் அவரைச் சந்தித்த நபர்களை வரவழைத்து அவர்களுக்கும், கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதிக்குமாறு பிரிட்டன் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.