டில்லி

யெஸ் வங்கியில் 10 பிரபல குழுமத்தைச் சேர்ந்த 44 பெரிய நிறுவனங்களின் ரூ.34000 கோடி வாராக்கடன் நிலுவையில் உள்ளன.

வாராக்கடன் தொகை அதிகரிப்பால் யெஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது.  நிர்வாக செலவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.  இதையொட்டி ரிசர்வ் வங்கி யெஸ் வங்கியின் இயக்குநர்கள் குழுவைக் கலைத்து விட்டு நிர்வாகப் பொறுப்பை எடுத்துக் கொண்டது.  வங்கியின் மோசமான நிதிநிலையையொட்டி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த வங்கியின் தலைவர் ராணா கபூர் இல்லம் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை இட்டனர்.  இந்த சோதனையில் ஏராளமான சந்தேகத்துக்குரிய கடன் கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.  அதன்பிறகு அவர் மீதும் மற்றும் அவர் குடும்பத்தினர் மீதும் அண மோசடி புகார்கள் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த விசாரணையில் யெஸ் வங்கியின் வாராக்கடன் பட்டியலில் பல பெரிய நிறுவனங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.   10 பிரபல நிறுவனக் குழுவைச் சேர்ந்த 44 நிறுவனங்களின் வாராக்கடன்கள் ரூ.34000 கோடி அளவுக்கு உள்ளது.  இதில் அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த 9 நிறுவனங்கள் ரூ.12800 கோடி வாராக் கடன்கள் வைத்துள்ளன.   சுபாஷ் சந்திராவின் எஸ்ஸெல் குழுமம் ரூ.8400 கோடிக்கு வராக் கடன்கள் வைத்துள்ளன.

இவற்றுடன் திவான் விட்டு வசதிக் குழுமத்தின் டி எச் எஃப் எல், பிலீஃப் ரியல்டர்ஸ் நிறுவனங்களின் வாராக்கடன்கள் ரூ.4735 கோடி அளவில் நிலுவையில் உள்ளன.   அது மட்டுமின்றி திவாலாகி உள்ள இ எல் அண்ட் எஃப் எஸ் ரூ.2500 கோடியும் ஜெட் ஏர்வேஸ்  ரூ.1100 கோடி கடன் பாக்கி வைத்துள்ளன.

இதைத் தவிர கேர்கர் குழுமம் ரூ.1000 கோடி, பாரத் இன்ஃப்ரா, ரசல் அசாம்டீ, எவெரெடி, கைதான், ஓம்கார் குழுமம், அகிய்வை சுமார் ரூ1500 கோடி முதல் ரூ. 2700 கோடி வரை, ராடியஸ் டெவெலபர்ஸ் 1200 கோடி எனக் கடன் வாங்கி உள்ளன.   அதைத் தவிரச் சிறு கடன்களும் ஏராளமாக நிலுவையில் உள்ளன  இந்த நிறுவன விவரங்களைக் கடந்த வாரம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார்.

[youtube-feed feed=1]