சென்னை:
தமிழ்நாடு வன்னியகுல அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நியமனம் செய்தது.
இது தொடர்பான வழக்கை விசாரணை நடத்திய நீதிமன்றம். அறிவுறுத்தியதின் பேரில், தமிழக அரசும், அதற்கான சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி, அறக்கட்டளையின் தலைவராக சந்தானம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்
.அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு வன்னிய குல சத்திரிய பொது டிரஸ்ட் மற்றும் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு வன்னிய குல சத்திரிய பொது டிரஸ்ட் மற்றும் அறக்கட்டளை தலைவர் நீதிபதி ராஜேஸ்வரன் மற்றும் சந்தானம் ஐஏஎஸ் முயற்சியால் ராயப்பேட்டையில் உள்ள (செங்கல்வராயன் அறக்கட்டளையின் ) சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகிறது.
ராயப்பேட்டை பைலட் தியேட்டர் அருகில் உள்ள செங்கல்வராயன் டிரஸ்ட்டுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. இந்த சொத்துக்களை பல ஆண்டுகளாக சிலர் அனுபவித்து வந்தனர். அவர்கள் வெளியேற மறுத்து வந்த நிலையில், தற்போதைய அறங்காவலர் குழு அவர்களை வெளியேற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது…
இது வன்னியகுல மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.