லிஃபோர்னியா

மெரிக்க கிராண்ட் பிரன்சஸ் சொகுசுக் கப்பல் இன்று 21 கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் கலிஃபோர்னியா துறைமுகம் வருகிறது.

சென்ற மாதம் ஜப்பானுக்கு வந்த டயமண்ட் ப்ரினஸச் என்னும் கப்பல் 3700 பேருடன் யோகோகாமா கடற்கரையில் தனிமைப்படுத்தப்பட்டது. கப்பலில் இருந்த்வர்களிடம் சோதனை நடத்தியதில் சுமார் 700 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் கிராண்ட் பிரின்சஸ் என்னும் சொகுசுக் கப்பல் ஹவாயில் இருந்து சான்ஃப்ரான்சிஸ்கோ சென்று கலிஃபோர்னியாவுக்குத் திரும்பி வந்துக் கொண்டு இருந்தது.  கடந்த மாதம் இந்த கப்பலில் பயணம் செய்த ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வந்தன.  அதையொட்டி சுகாதார அதிகாரிகள் கப்பலில் இருந்த 3500 பேரிடமும் சோதனை நடத்தியது.  அதில் 21 பேர் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அதையொட்டி அந்த கப்பல் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு துறைமுகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டது.  இன்று இந்தக் கப்பல் கலிபோர்னியா துறைமுகத்துக்குள் வர உள்ளது.  அப்போது கப்பலில் உள்ள அனைவரையும் தனிமைப்படுத்தி சோதனைகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது